16

Feb

2012

காதோடுதான்

காதோடுதான் நான் பேசுவேன்

          நான் நிலவை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. கழுத்து வலிக்கும் என்பதற்காக அல்ல. மனசு வலிக்கும் என்பதற்காக. நிலவின் ஒளியில் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கதை சொன்னவர்களின் நினைவு இன்றும் என் நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் அன்று சொன்ன கதைகள் அத்தனையும் என் மனத்தோப்பில் விதைகளாகவே விழுந்து விட்டன. அதே கதைகளை வேறுபடுத்தியும், வித்தியாசமாகவும் பார்த்த என் பார்வையின் பதிவுகளே இந்த “நான் பேச நினைப்பதெல்லாம்” என் கடந்த நூலை உங்கள் கைகளில் கொடுக்கும் போது இந்நூல் பொழுதுபோக்கு நூலல்ல சமுதாயத்தைப் பழுதுபார்க்கும் நூல் என்று மடியில் வைத்தேன். ஆனால், இந்நூல் பழுதுபார்க்கும் நூலல்ல. உங்களுக்குள்ளேயே உழுது பார்க்கும் நூல். இந்நூலில் எதையோ பெரிதாகச் சாதித்து விட்டேன் என்ற இறுமாப்பு எனக்கில்லை. ஆனால் உங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் சில உணர்வுகளை உசுப்பி விட்டால்! எழுத்துலகில் நான் ஜெயித்து விட்டேன் என்று அர்த்தம். இது உங்களுக்கு ஒரு சவால் சிந்தியுங்கள். அடுத்த எனது காலமெல்லாம் உன்னோடு என்ற புத்தகத்தோடு சந்திக்கிறேன்!

ARCHIVES