07
Apr
2023
(நாட்டின் நடப்புக்களும்நான் காணும் அவலங்களும் நாம்
வாங்கியசுதந்திரத்தைகாற்றில் பறக்கவிட்டுவிட்டோமா? அல்லதுவாங்கிவிட்டோம்
என்றவதந்தியைப்பரப்பிவிட்டோமா? புரியாததால் எழுந்தகேள்வியின் வேள்வி இது)
|
ஓட்டைக் குடிசைக்கும் உத்திரவாதம் இல்லாது மாற்றத் துணியின்றி வேற்றுடையும் இல்லாது, |
|
சிவகாசிக்குப் பறக்கப்பட்டு சிறகுகள் ஒடிக்கப்பட்டு கருவறைவிட்டுவந்து தொழிற்சாலையைத்தொட்டிலாக்கி, |
|
ஓ மகாத்துமாவேஉனக்கும் |
நாட்டைநந்தவனமாய் நம்பிவந்தசாமியார்கள் காட்டைஅந்தப்புரமாக்கி கன்னியர்களைக் கருவறுக்கும் |
|
இறைவனேமனிதஅவதாரம் எடுத்துவந்தகாலம் போய் மனிதனே இறைவனாக மாறுவேடம் போடுகின்ற |
|
சுதந்திரம் வாங்கிவிட்டோமென்று |
பள்ளிக்குஅழைத்துவந்து பள்ளியறையில் கசக்கிவிட்டு துள்ளித் திரியும் வயதில் கொள்ளிவைத்துஅடக்கிவிட்டு |
சல்லிக் காசுகளைஎறிந்து சட்டத்தைஅமுக்கிவிடும் சாமான்யர்களுக்குஎப்போது சுதந்திரம் வாங்கித் தந்தாய்? |
தாய்மைக்குப்பேரம் பேசி தன் மகனைபணயம் வைத்து தங்கத்தில் குறைவுஎன்றால் அங்கங்கள் சிதைக்கப்படும் |
பெண் குழந்தைபிறப்பதென்றால் கருவறையேகல்லறையாகும் கல் நெஞ்சர்களுக்குஎப்போது சுதந்திரம் வாங்கித் தந்தாய்? |
ஓ மகாத்துமாவேஉனக்கும் பொய் சொல்லத் தெரியுமோ! |
காடுவித்துமாடுவித்து கல்லூரிக்குஅனுப்பிவைத்து கல்வியைப்பறக்கவிட்டு கருப்பையைநிரப்பிவிட்டு |
கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் குடித்தனம் நடத்துகின்ற கோமாளிகளுக்குஎப்போது சுதந்திரம் வாங்கித் தந்தாய்? |
கைதியாய் அழைத்துவந்து கயிற்றினிலேதொங்கவிட்டு கைபிடித்தமனைவியையும் காவல் நிலையத்தில் ருசித்துவிட்டு |
சட்டத்தைவிற்றுவிட்டு சவங்களுக்குகாவல் நிற்கும் சந்தர்ப்பவாதிகளுக்குஎப்போது சுதந்திரம் வாங்கித் தந்தாய்? |
ஓ மகாத்துமாவேஉனக்கும் பொய் சொல்லத் தெரியுமோ! சுதந்திரம் வாங்கிவிட்டோமென்று சும்மாதானேசொன்னாய்? |