21

Jul

2023

மனிதநேயம் செத்த மணிப்பூர்…

கும்பி எரிகிறது. குலை நடுங்குகிறது. நாட்டில் நடப்பது என்ன? மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மானங்கெட்டு மரியாதை கெட்டு இன்னும் டிஜிட்டல் இந்தியாவில் வாழ்கிறோம் என்று மார்தட்டப் போகிறோமா? வீடு பற்றி எறியும்போது வெளிநாட்டிற்குச் சென்று வாய் கிழிய உரையாற்றுவதுதான் நாட்டு அமைச்சர்களின் ராஜ தந்திரமா? எதற்கு எரிகிறது ஏன் எரிகிறது? என்று எதற்கும் கவலைப்படாமல் அடுத்த பிக்பாசுக்கு ஆள் எடுக்கப் போறாங்களா? என்பதில் அக்கறை காட்டிக் கொண்டிருந்தால் இனிமேல் அந்த ஆண்டவனால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது?

இப்போது தான் மத்திய பிரதேசத்தில் ஒரு திமிர்பிடித்த நாய் ஒரு மலை வாழ் மனிதன் மீது மூத்திரம் பெய்ததையே! இன்னும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் அலைகிறோம். இப்போது கண்ணையும் பொத்துக் கொண்டு அலையும் அளவிற்கு ஒரு கண்ராவி அரங்கேறியுள்ளது. கருமம்!. இந்தக் காட்டு மிராண்டிகளைக் கண்டதும் சுட்டுத்தள்ள வேண்டாமா?

மணிப்பூரிலே மலைச்சாதிப் பெண்கள் மூவரை நிர்வாணமாக்கி அதில் ஒருவரை காட்டுப் பகுதியில் வைத்து கற்பை வேட்டையாடுகிறார்கள். நாட்டுப்புறத்தில் நாக்கைத் தொங்கப்போட்டு அலைகிற இரண்டு கால் நாய்கள். இதனைத் தடுக்க வந்த தகப்பனையும், சகோதரனையும் கொன்றுவிடுகிறார்கள். எங்கிருந்து அவர்களுக்கு இந்தத் தைரியம் வருகிறது? ஏனென்றால் அவர்களை ஏவி விடுவதே அரசியல் வாதிகள் தானே! அதனால் தான் அந்த நாய்கள் எந்தப் பயமும் இன்றி மனித வேட்டையாடுகிறார்கள்! இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் அவர்களுக்கு மரண பயத்தைக் காட்ட வேண்டாமா?

மணிப்பூரில் உயர்சாதி என்று ஊருக்குள் திரிகிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகள் தனக்கு வேண்டும் என அலைகிறார்கள் இந்தத் தரங்கெட்ட மனிதர்கள் இவர்கள்தான் மேத்தே என்ற மேல்சாதிக்காரர்கள். இவர்கள் குக்கு என்ற மலைவாழ் மக்களை நசுக்கப் பார்க்கிறார்கள். இதற்குத் தூபம் போட்டு சாபத்தைக் கட்டிக் கொண்டவர்கள் அரசியல்வாதிகள் என்ற அயோக்கியர்கள்.

மணிப்பூர் என்பது 90% மலைகளையும் 10% சமவெளிகளையும் உள்ளடக்கியது 10% த்தில் குக்கி இன மக்கள் வாழ்கிறார்கள். இப்பகுதியில் மேத்தா என்ற மேல் சாதி மக்கள் இடம் வாங்க முடியாது. அதே சமயத்தில் இவ்வின மக்கள் கிறிஸ்தவர்களாகவும், முகமதியர்களாகவும் இருப்பதனால் கிறிஸ்தவ மிஷனரியால் கல்வியும் கற்று உயர்பதவியும் பெற்று சமவெளிப் பகுதியில் இடம் வாங்கி குடியமரத் தொடங்கினார்கள். இந்த வளர்ச்சிதான் மேத்தா இன மக்களுக்கு வயிற்றெரிச்சல் இவர்கள் வாழவும் வழிதெரியவில்லை. பிறர் வளர்வதும் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் வருகின்ற வக்கிரப்புத்திக்கு வடிகால் அமைத்து பிறரையும் வாழவிடாமல் தடுப்பதே இந்த வன்முறை, கலவரம்!

நிலப்பகுதியில் வாழ்கின்ற மேத்தே மக்களினத்தைச் சேர்ந்தவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள். மூன்றில் இரண்டு பகுதி ஆட்சியாளர்கள் இவர்களே! இருந்தாலும் இவர்களுக்குப் புத்தியில்லை புதிய வாழ்வு அமைத்துக் கொள்ள திறமையில்லை. அடுத்தவர்கள் ஆட்சியில் இல்லாதபோதும் முன்னேறுகிறார்களே! என்ற ஆத்திரம் வன்முறையாக மாறுகிறது. எங்கே தன்னிடம் தமக்குரிய பங்கைக் கேட்டுவிடுவார்களோ எனப்பயந்து அடுத்தவர்கள் மீது இனக் கலவரமாக ஏவி விடுகிறார்கள். அதை மதக்கலவரமாக மாற்றிச் சொல்கிறார்கள்.

நகருக்குள் இருக்கும் குக்கி மக்களை நகர்த்துவதற்காகக் கும்பலாகச் சென்று தாக்குகிறார்கள். அங்குள்ள பெண்களை நிர்வாணப் படுத்துகிறார்கள். வீதியில் ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். காட்சிகள் வலைத்தளத்தில் வருகிறது. நாடே கொந்தளிக்கிறது!. நீதிமன்றம் தலையிடுவேன் என்கிறது. ஏவிவிட்டவர்கள் இப்போது நாய்களை வேட்டையாட நல்லவர்கள் போல் பேட்டிக் கொடுக்கிறார்கள். காரணம் அவர்கள் கடிந்துவிட்டார்களே என்பதல்ல அடுத்தவர்கள் பார்க்கும்படி அவர்கள் கடிந்துவிட்டார்களே என்பது தான். மற்றபடி அவர்கள் மனித நேயத்திற்காக அவர்கள் வாதாடவில்லை. மதக்கலவரத்தைத் தூண்டி விட்டால் மனிதர்கள் எரியும்போது இதமாய் குளிர்காயலாம். இறந்தவர்கள் ஒட்டை எப்போது வேண்டுமானாலும் வந்து போட்டுக் கொள்ளலாம் என்பது தான்.

அது சரி எவனோ ஒருவன் எடுக்கின்ற காணொலி தான் இப்போது வலம் வருகிறது. ஊடகங்கள் எல்லாம் உறங்கிப் போனீர்களா? பணத்திற்காகப் பிணங்களைப் படம்பிடிப்பதை நிறுத்தி விட்டீர்களா? தயவுசெய்து உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் இந்தக் கள்ளக்காதல், ஆசிரியர்களை அசிங்கப்படுத்துவது இளைஞர்களைப் பாதிக்கின்ற செய்திகள், மது குடி போன்ற காட்சிகள் உள்ள திரைப்படங்கள் இவற்றையெல்லாம் ஊடகத்தில் காட்டுவதை நிறுத்துங்கள். அவற்றின் மூலம் கிடைக்கின்ற காசினை தூக்கி எறியுங்கள் நீதியின் தராசு உங்களை கையில் இருக்கட்டும். ஏழைகளுக்காய் நீதி கேட்கும் இயந்திரமாய் உங்கள் ஊடகம் இருக்கட்டும். இதனால் ஊனமாகிப் போன இந்த மனித நேயம் எழுந்து நிற்கட்டும்.

ஐயா மாபெரும் வெகு சனங்களே இளைஞர்கள் நிறைந்த இந்தியா என்று மார்தட்டுபவர்களே! உங்கள் வீரம் எல்லாம் அடுத்தவிட்டுப் பெண்களை நிர்வாணப்படுத்துவதும், வேடிக்கைப் பார்ப்பதும் தானா? இதற்கு எதற்கடா? வீரப்பரம்பரை என்ற வெட்கங்கெடட்ட பெயர்? சீனாக்காரன் சேட்டை செய்கிறான். அதனை ஒன்றும் புடுங்க முடியவில்லை! ஜப்பான் காரன் முன்னேறுகிறான் அவனை நெருங்கக் கூட முடியவில்லை. அமெரிக்கா காரன் அதட்டுகிறான் அவனுக்கு அடி வருடுகிறீர்கள். இங்கொருவன் ஏமாளி மாட்டிக் கிட்டான் என்றால் அவன் தலையில் ஏறி மூத்திரம் இடுவீர்கள். அட போங்கடா பொட்டப்பயல்களா? சிங்கம் சிங்களாத்தான் வரும் அடப் பண்ணிப் பயலுகளா? கூட்டம் கூட்டமாய் போய் நாட்டைச் சாக்கடையாக்கி வைத்திருக்கிறீர்களே! அரசியல் வாதிகள் உங்கள் மீதி சாக்கிடையை அள்ளி அள்ளிக் கொட்டுகிறார்களே அடிதடிகளா! நாம் அசிங்கப்படுகிறோம் என்று புரியவில்லையா! அதுசரி நல்ல குடும்பத்தில் இருந்து பிறந்தவர்கள் இதனை செய்யமாட்டார்கள்! ஒரு பெண் யாரிடமாவது கூடும்போதெல்லாம் பிள்ளைப் பெற்றால் பிள்ளையா பிறக்கும்? பிசாசுதானே பிறக்கும்! அதனால் தான் நாடு சுடுகாடாகிறது.

“பெண்ணைத் துகிலுரிந்தால்
நாடு நாசமாகப் போகும்
துரியோதனிடம் கேட்டுக்கொள்ளுங்கள்
வேடிக்கை பார்ப்பவர்கள்…
செத்த சவங்கள்…”

ARCHIVES