06

Dec

2011

வசந்தகால அழைப்புகள்

கல்வாரியில் கேட்ட காலடி ஓசை

வசந்தகால அழைப்புகள்

பூமியின் வசந்த காலங்களில் பூத்து குலுங்கும் சில மலர்களைப்போல மனிதனின் ஆன்மீக வாழ்க்கையை ஆசீர் மலர்களால் நிரப்ப இந்த தவக்காலம் புனிதங்களுடன் வருகிறது.

மனம்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்  இதுதான் இயேசு மீட்பரின் விடுதலைச் செய்தி. நற்செய்தி என்றால் என்ன என்பதற்கு இயேசு விளக்கம் தரவில்லை மாறாக அவர் தமது பணிவாழ்வின் வழியாக நம் வாழ்வின் விடுதலை அனுபவமாக மாறினார். இயேசுவின் அன்புச்சீடர் சொல்வார்  ஆதிமுதல் இருந்ததை, நாங்கள் கேட்டதை, கண்ணால் பார்த்ததை உங்களுக்கு அறிவிக்கிறோம் அதை நோக்கினோம், கையால் தொட்டுணர்ந்தோம் எனவே நாங்கள் அறிவிப்பது உயிரின் வாக்கு   ஆகவே இயேசுவின் சொல்லாலும் செயலாலும் அன்பின் இறைவன் நமது வாழ்வின் அனுபவமாக ஆனார்.

நற்செய்தியை நோக்கி மனம் திரும்புதல் என்றால் முழுவாழ்வை பெற ஒளியும் வழியுமான இயேசுவோடு பயணம் செய்வது என்பதாகும். அந்தப் பயணம் கரடு முரடானது. சிலுவைகள் நிறைந்தது. அப்பயணப்பாதை நம்மை இயேசுவோடு இட்டுச்செல்லும். ஆனால் கல்லறையோடு முடிந்துவிடுவதில்லை. நற்செய்தி வாக்களிக்கும் முழுவாழ்வில் உயிர்க்கச்செய்யும்.

இறைமகனின் பேரன்பையும் தியாகத்தையும் ஆழமாக சிந்தித்துத் தியானிக்கும் மனிதன் இறைவனை இன்னும் அதிகமாக அன்பு செய்கின்றான். இயேசுவின் பாடுகளையும் துன்பத்தையும் சிலுவையில் தாங்கிய அவமானத்தையும் மனிதன் முழுமையாக புரிந்துகொள்ளும் போதுதான் இறைவன் இந்த மனுக்குலத்தை மீட்பதற்கு எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்துள்ளார் என்பது தெரிய வரும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சரித்திரத்தில் தோன்றிய இயேசு வாழ்வை நிலை நிறுத்த தன்சிலுவை வழி நடந்தார். இதோ இன்றும் இயேசு சிலுவை வழி நடக்கிறார். அவரின் விடுதலை நற்செய்தியிலே விசுவாசமும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட நம் வழியாக நமது அன்றாடவாழ்விலே உறவுமுறைகளில் அவரோடு சேர்ந்து சிலுவைப்பாதையில் நடப்போம்.

ARCHIVES