01
Aug
2025

நாடே பற்றி எரிந்து கொண்டு இருக்கும் போது நான் இப்படி பேசுவது நாத்தீகன் என்று என்னைப்பற்றி நா கூசாமல் பேசுவீர்கள் மதத்தின் மீது பற்றுக் கொண்டதுபோல் நடிப்பவர்களும், பக்கத்தில் இருக்கும் பிற மதத்துக்காரர்களைச் சீண்டுவதுதான் பக்தி என்று நினைப்பவர்களும், அவர்களைப் பழித்துப் பேசினால்தான் தலைவர் பதவி கிடைக்கும் என நினைக்கின்ற இந்தப் பாழப் போன தேசத்தில் நான் இப்படிப் பேசுவதால் நாத்தீகன் என்று சொன்னீர்கள் என்றால்? நான் நாத்தீகன் என்பதிலே பெருமை அடைகிறேன்.
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் அக்கிரமங்கள், அயோக்கியத்தனங்களை கேள்விப்பட்டு நாடே கொதித்துப் போய் இருக்கிறது. செய்தித்தாள்களும் ஊடகங்களும் ஏறக்குறைய 500 பெண்கள் கொடூரமாகக் கெடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அதில் பாதிப்பேர் பள்ளி மாணவிகளின் சீருடைகளைக் கிழித்து சிதைக்கபட்டிருக்கிறார்கள் என்பதுதான் மனம் பதறுகிறது. இன்றல்ல, நேற்றல்ல 1979ஆம் ஆண்டிலிருந்தே இந்த அபயக்குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசின் செவிகள் செவிடானதால் அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்தச் செவிகளில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டதால் ஆன்மீகப் போர்வையில் அந்த நாய்கள் நடமாடியதால் கடிக்கப்பட்ட வலி அந்தக் கடவுளுக்குக்கூட கேட்கவில்லை.
தர்மஸ்தலா ஒரு ஆன்மீகஸ்தலம். இந்த கோவில் நிர்வாகத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு குடும்பம் நிர்வகித்து வந்தது. ஆன்மீகத்தின் உக்கிரம் அக்கிரமானால் காமத்தில் களியாட்டம் தலைவிரித்தாடி போலிச் சாமியார்கள் அதனைப் பொழுதுபோக்காக வேட்டையாடுகிறார்கள். இந்தக் கோவில் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும், விடுதிகளும் இயங்கி இருக்கிறது. அப்படி இவர்களது பள்ளியில் தொடக்கத்தில் இருந்து வேதவல்லி என்ற ஒருவர் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பணிமூப்பின் அடிப்படையில் பள்ளி முதல்வராகப் பணியேற்க வேண்டிய நேரத்தில் நிர்வாகத்திற்கு வேண்டியவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து இவர் நீதிமன்றம் சென்றதால் ஒருநாள் இவரது வீட்டில் கற்பழிக்கப்பட்டு குளியலறையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு கிடந்தார். இதற்கு இன்றும் கூட நீதி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டு இந்த கோவில் நிர்வாகம் நிறுத்திய நபருக்கு எதிராக தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து போட்டியிட்டதனால் இவரது மகள் பத்மலதா என்பவரைக் கெடுத்து அதன் அருகில் ஓடுகின்ற நேத்ராவதி ஆற்றில் அரை நிர்வாணமாக ஆற்றுப்படுகையில் கிடந்தார்.
அவர்கள் பலமுறை தேடிய இடத்தில்தான் பிணமாகக் கிடந்தார். சுமார் 400பேர் கொண்ட குழு தேடிய இடத்தில் தான் அவர் பிணமாகக் கிடந்தார். அன்றிலிருந்து இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. ஆனால் சௌஜன்யா அங்கு தெய்வமாக இருக்கிறார் என்று கல்லில் சிலை செய்து வழிபட்டு வருகிறார்கள். இவளை ஆற்று படுகையின் அருகில் ஒரு கொட்டகையில் வைத்து ஒருவன் கெடுத்து விட்டான் என்று சந்தோஷ் ராவ் என்ற மனநோயாளியைக் கைது செய்து அனைவரையும் கோமாளியாக்கிவிட்டார்கள்.
இப்போது இருவர் இணைந்துள்ளர்கள் அதில் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஜாதாபட் இவரும் இவரது மகள் அனன்யா இருவரும் 2003ஆம் ஆண்டு இந்தக் கோவிலுக்கு வந்தார்கள். அங்கு திடிரென்று அனன்யாபட் காணாமல்போய் மீண்டும் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னொருவர் கேரளாவைச் சேர்ந்த அனிஷ் இவரது தந்தை 2018ல் ஒரு விபத்தில் மரணமடைந்தார். தற்போதுதான் தெரிகிறது இவர் அந்தக் கோவில் நிர்வாகத்தோடு ஒரு நிலத்தகராறு இருந்ததாகவும் இதனால் பெரியோர்களால் மிரட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
இவ்வளவு நடந்தும், கண்டுகொள்ளாமல் இருந்த சமூகம் இப்போது இவ்வளவு தீவிரம் எப்படி வந்தது என்று தானே கேட்கிறீர்கள்? மனச்சாட்சி தூங்கவில்லை. ஒரு மனிதன் மூலமாக அது பேச ஆரம்பித்துவிட்டது. அந்த கோவில் வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் பீமா என்பவர் வேலை செய்து வந்தார் இவரைத்தான் அந்தக் காமக் கொடூரர்கள் கற்பழித்துக் கொன்ற சடலங்களை எல்லாம் புதைக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவரையும் மிரட்ட இவர் உயிருக்குப் பயந்து வேலையை விட்டு 2014ஆம் ஆண்டே அருகிலுள்ள மாநிலத்திற்கு ஓடிவிட்டார்.
இவர் ஓடினாலும் அந்தப் பாவங்கள் இவரைத் துரத்திக் கொண்டேதான் இருந்தது. பலநாள் இவரது தூக்கத்தையும் அது கெடுத்தது. யாரோ சிலர் கொடுத்த தைரியத்தின் அடிப்படையில் துணிந்து வெளியே வந்து இருநூறு பெண்களுக்கு மேல் இவர்கள் சிதைத்ததை நான் புதைத்து இருக்கிறேன். அதில் பல பள்ளிக்கூட சிறுமிகள் உள்ளாடை கிழிந்த நிலையில் அரைநிர்வாணமாக கழுத்தை நெறித்து, முகத்தில் ஆசிட் வீசி, பல கொடூரங்களைச் செய்து இந்தக் காமத்தின் பாவத்தை அந்தக் கயவர்கள் அரங்கேற்றி உள்ளார்கள் என்று சொல்கிறார்.
இதை எல்லாம் கேட்கும்போது உங்கள் இதயம் துடிக்கவில்லையா? அந்தப் பொறுக்கிகளைத் துடிக்கத் துடிக்க கொல்ல வேண்டும் என்று உங்கள் இதயம் சொல்லவில்லையா? எங்கோ நடக்கிறது என்று இருந்து உங்கள் பிள்ளைகளுக்கு வந்தால் தான் உணர்வீர்களா? நீங்களே சொல்லுங்கள்?
இந்த அயோக்கியர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்? இங்கு பல அயோக்கியர்களுக்குப் பாதுகாப்பு அரண் அந்தப் பக்திதானே! இங்கு எல்லோரையும் முட்டாளாக்குவது ஆன்மீகம் தானே! ஆன்மீகத்தின் மீது கேள்வி கேட்கக் கூடாது. சந்தேகப்படக்கூடாது என்ற முட்டாள் தனமான மூடநம்பிக்கைகளை மனதில் விதைத்து விட்டதால் இன்று இத்தனைக் குழந்தைகளை நாம் புதைத்திருக்கிறோம்.
ஒரு பள்ளியில் சின்ன தவறு நடந்தவிட்டால் ஊரே திரண்டு வந்து பள்ளியை நொறுக்குகிற முட்டாள்களே! அந்த அக்கிரமம் நடக்கின்ற தர்மஸ்தலா போன்ற இடங்களைச் சுற்றி ஊர்களே இல்லையா? அதைச் சுற்றி மனிதன் என்ற பெயரில் சதைப் பிண்டங்கள்தான் உலவிக் கொண்டிருந்தனவா?
இதைத்தான் பராசக்தி படத்தில் வசனம் பேசியது கோவில் வேண்டாம் எனச் சொல்லவில்லை. அது கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதுதான். இப்போது கோவில்களின் கருவறைகள் எல்லாம் அயோக்கியர்கள் கற்பழிப்பு அறையாக அல்லவா இருக்கிறது. காஸ்மீரில் ஆஷிபா என்ற சிறுமி தொடங்கி இந்த நிகழ்வு வரை அங்குள்ள தெய்வங்கள் எங்கே போயின? அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூரையாடியது உன் பக்தியைச் சொல்லித்தானே! தெய்வமே! எங்கள் பிள்ளைகளைத் தின்னக் கொடுக்க நீ பாதுகாக்கவில்லையா? உனக்கு கண் இல்லையா? இல்லை நீ கடவுளே இல்லையா?
எங்கள் மகள்களைத் தின்னும் இந்த மண்ணும் ஒரு பூகம்பத்தால் புதை குழிக்குள் போகாதா? எங்கள் இல்லத்து இளவரசிகள் ஏதோ ஒரு கோவிலில் கண்டவர்களால் சிதைக்கப்பபடத்தான் வேண்டுமா? இதற்கு ஒரு கோவில் தேவையா? புடவை களைகிற பூஜையறைத் தேவையா? கற்பழிக்கிற சாமியார்களின் காலில்தான் விழ வேண்டுமா? கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறைதான் எங்கள் நண்பனா? அயோக்கியர்கள் ஆன்மீகத்தை புதைகுழியில் தள்ளுவதுதான் மனிதத் தர்மமா?
பெண்குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களுக்குத் தெரியும் இந்த அயோக்கியர்களுக்குச் சாவு மணி அடிக்காவிட்டால் நாளை நம் வீட்டிலும் ஒரு காவு கேட்கும் என்பதுதான் வாருங்கள் இந்த வரம்பு மீறுகிறவர்களின் நரம்புகளை அறுப்போம் பெண்களைச் சூறையாடும் கோவில்களை இடிப்போம்! காமத்தில் திளைக்கும் சாமியார்களை ஒழிப்போம்! பெண்களுக்கு சமத்துவம் கொடுக்காத எந்த மதமும் வேண்டாம் இனிமேல் சேலைகட்டிய சிலைகள் எல்லாம் எங்கள் சாமிகள் அல்ல எங்கள் கண்முன்னால் இருக்கின்ற பெண்களே எங்கள் வீட்டுத்தெய்வங்கள் குலதெய்வங்கள் இனிமேலும் கல்லில் கடவுளைத் தேடினால் அது எங்கள் குழந்தைகளின் கற்பைக் காப்பாற்றாது. இனிமேல் நமது குழந்தைகளை நாமே இந்தக் கயவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வோம். கடவுள் இருந்தால் அவர்களுக்குத் தண்டனைக் கொடுக்கட்டும்.!
“மகள்களைப் பெற்ற
அப்பாக்களே! இனியும்
மௌனமாய் இருந்தால் – அது
மகள்களுக்குச் செய்யும் துரோகம்!”