19
Jun
2026

குழந்தையாய் இருக்கும் வரை நமக்கு பூமி சொர்க்கமாகவும் நம் உடன் இருப்பவர்கள் தேவ தூதர்களாகவும் நமக்குக் காட்சி தருவார்கள். நாம் நடக்க ஆரம்பித்து நண்பர்களைத் தேடி வீதிக்கு வரும்போதுதான் நமக்கு சில வில்லன்கள் தெரிய வரும்.
தெருவுக்கு வரும்போது நாய்கள் வரும். அது நமக்குப் பயத்தைத் தரும். பள்ளி கூட ஒருவித பயத்தைத்தரும். ஆனால் பாடங்கள் எளிதாகும்போது ஆசிரியர்களின் அன்பு புரியும்போது, அதுவே நமக்குச் சொர்க்கமாக மாறும். சிலரின் இறப்பும் அப்போது கேட்கின்ற அழுகையும் நமக்குச் சோகத்தைத்தரும். திடிரென்று நடக்கின்ற விபத்து அதிர்ச்சியைத்தரும். எங்கேயாவது தீப்பிடித்து எரிந்தால் அது நமக்குப் பயத்தைத்தரும். வயது ஏறும்போது மனதில் சில தெம்புகள் வரும்போது அந்த பயத்திலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவோம்.

கல்வி, வேலை என்று சமுதாயத்தோடு நாம் கலக்கும்போது, வலியவர்கள் எளியவர்களை வசைபாடுவதும், அதிகாரத்திலிருப்பவர்கள் தம் அருகில் இருப்பவர்களைப் பந்தாடுவதும், தன் ஆசைக்கு இணங்காதவர்களை அச்சுறுத்துவதும், எதிர்க்க வலு இல்லாதவர்களை ஏறி மிதிப்பதும், அன்றாடங் காட்சிகளை திண்டாட வைப்பதும், எந்நாளும் பார்க்கின்ற இழிநிலைக்கு நாம் வந்துவிட்டோம்.
இதேபோல்தான் என் வாழ்விலும் கடந்து போன ஒரு நிகழ்வு என் நெஞ்சை விட்டு இறங்க மறுக்கிறது. அப்போது அதன் வலி எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் இப்போது அந்த வலி என்னை விட்டுப் போகவே இல்லை.

ஒரு கு இருக்கிறாள்? அவள் குடும்பம் எங்கு இருக்கிறது? என்று என்னிடம் கேட்காதீர்கள்! ஏனென்றால் அது எனக்கும் தெரியாது! அஅழகான பெண்! தேவதைப்போல் இருப்பாள். நான் படித்த, பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த ஊரில் அந்தத் தேவதை நடமாடி வந்தாள். தேவதையைக் கதையில் கேட்டவர்கள் நேரில் பார்ப்பதற்கு வாய்ப்புக் கொடுப்பதுபோல் அவள் வந்து கொண்டு இருப்பாள். அவளுடைய நிறம், உடைகள் எப்போதாவது அவளிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அவள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தும்.
பிறகு எதற்கு இங்வளுக்கும் தெரியாது! காரணம் அவள் மனநலம் குன்றியவள். அவளுக்கு நாம் பேசும் மொழி புரிகிறதா? என்று தெரியவில்லை. அவள் பேசும் மொழி யாருக்குப் புரியப் போகிறது என்று எனக்கும் விளங்கவில்லை.

அவள் தேவதை என்றால் தேவதைதான்! ஆனால் புத்திக் குறைபாடு உள்ளவள்! இதனால் உடனே நமக்கு என்ன தோன்றும்? அழுக்கடைந்த உடம்பு, கிழிந்த ஆடை, பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் அது முற்றிலும் தவறு. பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும் அந்தப் பெண். சில நேரங்களில் அழுக்கு உடைகளோடு வருவாள். எங்கே இருக்க வேண்டுமென்று தெரியாததால் அவள் சாய்ந்த இடம், அமர்ந்த இடம் தெரியாமல் அழுக்கடைந்து வருவாள்! பாவம் எங்கே இருக்க வேண்டியவளோ ஆள்தெரியாத, மொழி தெரியாத, தெருக்களில் ஒரு தேவதை தன்னை அழுக்காக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தாள்.
அவளை சில நேரம் பார்க்கும்போது யாரோ சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இவளுக்குப் பசிக்கும் நேரத்தில் உணவு கிடைக்கிறது. உடை தேவைப்படும்போது உடை கிடைக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். நாய்கள் கூட இவள் மீது நல்ல மரியாதை வைத்திருந்தது. இவளைக் கண்டு குரைப்பதில்லை, துரத்துவதுமில்லை.

ஆனால் மனித உருவில் நடமாடும் காமவெறி பிடித்த நாய்கள் அவ்வப்போது தன் இச்சையைத் தீர்க்க அவள் கச்சையைக் கழற்றி இருக்கிறது. இதனால் அந்தத் தேவதையின் அங்கங்கள் அவ்வப்போது மாறுபடும். தேவதை உயர்ந்த உருவம் என்பதால் உடனே அவள் மாற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஒன்பது மாதம் கடந்தபிறகு ரோட்டோரத்திலோ, குப்பைக்கூளங்களிலோ அவள் குழந்தைப்பெற்று விடுவாள். நாய்கள் கூட சில நேரங்களில் குழந்தையின் நலம் விசாரிக்க வந்துவிடும். சில நேரங்களில் சில மனிதர்கள் அதனைக் காப்பாற்றி அரசுக் காப்பகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இந்த அக்கிரமங்கள் அவ்வப்போது அவளுக்கு நிகழும்.
இந்த நிகழ்வு எனக்குத் தெரிந்து பலமுறை நடந்திருக்கிறது. காரணம் இங்கு யாரும் பொதுநலன் மீது அக்கறை இல்லாத மனிதர்கள் வாழும் ஊராக அந்த ஊர் இருந்தது. கட்சிக்காகவும், மதத்திற்காகவும் சில கூட்டங்கள் இருந்தாலும் அவர்கள் காசுக்காகக் குரைப்பார்களே தவிர இந்தக் கருமங்களுக்காக வாய் திறக்கமாட்டார்கள்.

அனாதைகள், ஆதரவற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இவர்கள் மீது இரக்கப்படத்தானே இறைவன் இதயத்தைக் கொடுத்திருக்கிறான். யாருமற்றவர்கள், எதிர்க்க வலுவற்றவர்கள் மீது ஏறிக் குதித்து விளையாடவா? இறைவன் உங்களைப் படைத்தான். அந்தத் தேவதை தனக்கு என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாத நிலையில் தனது சித்து விளையாட்டை விளையாடியவனை சிதைக்காமல் விட்டது யார் குற்றம்?
திக்குத் தெரியாதவளை தெருநாய்போல குதறியதை வேடிக்கை பார்த்த அந்த ஊர் எவ்வளவு வெட்கக்கேடானது! நாய்கள் கூட அந்தத் தேவதையிடம் நன்றியோடு நடந்து கொண்டபோது மனித நாய்கள் அவள் மடியை கனக்க வைத்ததை எந்த முட்டாள்களும் தட்டிக் கேட்கவில்லையே? என்று அப்போது வாழ்ந்த நான்குபேர் கேட்டு வைத்தார்கள்.

அங்காங்கு நடந்த தவறுகளைத் தட்டிக் கேட்கத்தவறியதால் இப்போது எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் செய்திகள்தான். போதை இல்லாதபோதே அவளைப் புழுதியாக்கிய இந்த மானிடச் சமூகம் இப்போது மனிதன் தனியாகத்தான் இருக்க நினைக்கிறான். தனக்கு வந்தால் மட்டுமே துடிக்கிறான். மற்றவர்களுக்கு வந்தால் வேடிக்கை பார்க்கிறான் என்பதால்தான் இங்கு பல தற்குறிகள் தான்தோன்றித் தனமாக தளிர்களைக் கூட கசக்கி எறிந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தவறுகள் குறைய வேண்டுமென்றால் மக்கள் வெகுண்டெழ வேண்டும்! தண்டனைகள் மக்கள் மன்றத்தில்தான் நடக்க வேண்டும். காவல் நிலையம் கோர்ட் என்பது லஞ்சத்தால், சிபாரிசால், அதிகாரத்தால், பல தீர்ப்புகள் திருத்தப்படுகிறது, தண்டனைகள் தடுக்கப்படுகிறது, குற்றவாளிகள் அடுத்த குற்றத்தைச் செய்ய அனுப்பப்படுகிறார்கள். மக்கள் மன்றமே விழித்தெழு! மகளைக் கெடுத்தவனுக்கு மரண தண்டனை கொடு. சாட்சிகளும் நீங்களே! தீர்ப்புகளும் நீங்களே! தண்டனை கொடுப்பவர்களும் நீங்களே, தவறுகள் செய்தது உறுதியாகிவிட்டால் அவனுக்கு இறுதி ஊர்வலம் நடத்திவிட வேண்டியதுதானே!. அவனுக்காக இரக்கப்பட்டு, யாராவது வந்தால் அவனையும் அந்தக் குழிக்குள் இறக்கிவிடுங்கள்.
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த ஊருக்கு வந்தேன். ஒரு வேளை அந்தத் தேவதை இங்குதான் திரிவாளோ என பலமுறை அவளைத் தேடிப்பார்த்தேன். பாவம் எத்தனைமுறை இந்தப் பாதகர்களின் பாவத்தைச் சுமந்தாளோ? நானும் கூட ஊமையாய் வாழ்ந்த அந்த நாட்கள் என் வாழ்வில் கறைபடிந்த நாட்கள்.
மனிதர்கள் தின்றது போக அந்தத் தேவதையை இந்த மண்ணும் தின்றுவிட்டதோ! அல்லது வேற்றிடம் சென்று விழுந்து விட்டாளோ? அந்தப் பாவத்தை சுமந்த ஊரில் மீண்டும் பாதம் பதிக்கிறேன். இந்தப் பாவத்தை எந்தப் பாவநாசத்தில் கொண்டு கழுவுவது?
“வலுவற்றவர்கள் மீது
வன்முறை செய்தால்
கழுவேற்றுங்கள் – இல்லை
கழுத்தை அறுத்துவிடுங்கள்”