24

Oct

2026

நான்காம் பாலினத்தார்…

பிறப்பால் மனிதன் ஒன்றெனக் கருதினும் உலக வாழ்க்கையில் மனிதன் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து, உறவுகள் முறிந்து, காட்டு விலங்குகளைப்போல் கடித்துக் குதறி, உயிரிழந்து, உணர்வுகள், மானம் இழந்து, மதிகெட்டு, மனம்போன வாழ்க்கையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

கடவுள் பாதி, மிருகம் பாதியாகக் கலந்த கலவை மனிதன் என்றார்கள். ஆனால் இப்போது கடவுளைக் காணவில்லை. மிருகங்களின் தொல்லைகளும் தாங்க முடியவில்லை. தேவர்கள், அரக்கர்கள் என்று குணங்களை வைத்துப் பிரித்தார்கள். ஆனால் இப்போது தேவர்களைத்; தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை. அரக்கர்கள் அகிலமெங்கும் பரவிக் கிடக்கிறார்கள். சொர்க்கம், நரகம் என்று சொன்னார்கள். வசதியைப் பெருக்கப் போகிறேன் என்று அறிவியல் வளர்ச்சியின் உதவியோடு இன்று சொர்க்கமாய் இருந்த இந்தப் பூமிப் பந்தை நரகமாக்கி நம்மையெல்லாம் எரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நாடுகெட்டு நாசமாய்ப் போவதற்கு யார் காரணம்? உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா? போட்டிகள், பொறாமைகள் பூமி தோன்றிய நாள் முதல் உண்டு! போட்டிகளை வென்றோம்! பொறாமைகளைக் கடந்து நின்றோம். அப்போது பலம் பொருந்திய இருவர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றியடைவது! அல்லது வாக்கு வாதம் செய்து வெல்வது என வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பலம் பொருந்தியவர்கள் என்றார்கள்.

பின்பு மனிதர்களிடம் கொஞ்சம் காட்டுமிராண்டித்தனம் புகுந்தது. அடி, தடி வெட்டுக் குத்து என்று பிறரை அடித்து நொறுக்கி அழித்து வந்தார்கள். அவர்கள் அறியாத நேரத்தில் அவர்கள் உடமைகளை அழித்துச் சேதப்படுத்தினார்கள். அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டியும் இருந்தது காட்டுமிராண்டித்தனமும் இருந்தது.

ஆனால் தற்போது கோழைகளின் கூடாரம் பெருகிவிட்டது! அயோக்கியர்களின் அட்டூழியங்கள் வளர்ந்துவிட்டது. ஆண்மையற்றவர்கள் அசிங்கங்களை அரங்கேற்றி நச்சுக் கொடி போல் நாடு முழுவதும் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லவர்களின் வளர்ச்சிகளைக் கண்டு பொறுக்க முடியாத அந்த நயவஞ்சகவர்கள் தன் முகத்தை மறைத்துக் கொண்டு நல்லவர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வதந்திகளைப் பரப்புவதும், மொட்டைக் கடிதம் எழுதுவதும் தனது முகங்களை மறைத்துக் கொண்டு இந்த முகமூடித் திருடர்கள் நாடெங்கும் பெருகிவிட்டார்கள்.

இந்த நஞ்சுகளைக் கக்கும் நாதாரிகள்தான் நான்காம் பாலினத்தார்கள் என்று நான் கருதுகிறேன். ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இருப்பவர்களை மூன்றாம் பாலினத்தார் என்று அழைக்கிறோம். நாட்டுக்குள் வாழத்தகுதியற்ற அடுத்தவர்களைக் கெடுக்கும் அசிங்கமான இதயங்களை கொண்ட இந்த ஆண்மையற்றவர்களை நான் நான்காம் பாலினத்தார் என என்கிறேன். இவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் அசிங்கப்படுத்த தன்னை மறைத்துக் கொண்டு இல்லாதது பொல்லாதது எழுதியும், பேசியும் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதே இந்த நயவஞ்சகர்களின் நோக்கம்.

வதந்தி என்பது ஒருவரை நேர்மையாக எதிர்க்கத் துணிவற்ற வஞ்சகர்கள் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம். இந்தக் கொடியவர்களுக்கு தகுதி இருக்காது, துணிவிருக்காது. ஆனால் பிறர் இடத்தைக் குறுக்கு வழியில் அடையத் துடிப்பவர்கள் அல்லது அடுத்தவர்களின் வாழ்வைக் கண்டு பொறாமைப்படுவார்கள். இத்தகைய எண்ணம் கொண்ட இந்த கீழ் மக்களால் மட்டுமே இந்த இழிசெயலைத் துணிந்து செய்ய முடியும்.

நாம் ஒவ்வொருவருக்கும் முதல் எழுத்து நமது தந்தையின் பெயர்;. பிறப்பின் மூலம் நமது அம்மாவை அகில உலகத்திற்குத் தெரியும். ஆனால் அப்பாவை நாமும் நமது அம்மாவும் தான் வெளி உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் நம் பெயருக்கு முன்னால் தந்தையின் முதல் எழுத்தை இடுகிறோம். அதிலிருந்து நம்மை நாமே அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

இதனைத் தவிர அடையாளம் தெரியாதவர்களைத்தான் நாம் அனாதைகள் என்கிறோம். ஒரு காலத்தில் இளம்வயதில் கணவனை இழந்தவர்களை, அல்லது குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள மூத்த பெண்;குழந்தைகளை கோயில் பணிக்காக நியமித்து வந்தார்கள். இவர்களில் ஒரு சிலர் தன்னை மறந்து தவறு செய்து அதன் மூலம் பிறக்கின்ற தேவ அடியார்களின் அந்தக்; குழந்தைகளுக்கு அடையாளங்கள் இல்லை. அவர்களும் அனாதைகளே! பிறப்பால் உடல் ஊனமாகப் பிறந்தவர்களும், இதனால் பிறரோடு போட்டியிட இயலாதவர்களுமாக இருப்பார்கள் மீது நாம் கட்டாயம் இரக்கப்பட வேண்டும்.

காலம் மாறி விட்டது. இன்றையக் காலகட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டு, புரிந்து கொண்டு தன்னை வளப்படுத்தி பல்வேறு சாதனையாளர்களாக சரித்திரம் படைக்கிறார்கள். ஆனால் மனப்பிறழ்வு உள்ள மாற்றுத் திறனாளிகள் அதாவது மன ஊனமுற்றவர்கள் மண்ணில் பெருகிவிட்டார்கள். இவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள். ஆனால் தற்பெருமை உள்ளவர்கள். போட்டிக்கு வரமாட்டார்கள். ஆனால் பொறாமை மிகுந்தவர்கள் தனக்குரியதை நினைத்து பெருமைப்படமாட்டார்கள். பிறருக்கு உரியதை நினைத்து வெந்து அழிவார்கள். அதை அழிக்கத் துடிப்பார்கள்.

அடுத்தவர்கள் வளர்ச்சி இவர்களுக்கு அருவெறுப்பாக இருக்கும். அடுத்தவர்களின் புகழ் இவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கும். அடுத்தவர்களின் திறமை இவர்களது அடி வயிரை எரிக்கும். ஆகவே இவர்களின் முழுநேரப் பணியே அடுத்தவர்களை அசிங்கப்படுத்துவது மட்டுமே. இவர்கள் இதற்காக எந்தச் சாக்கடையிலும் இறங்கித் தன்னை அசிங்கப்படுத்த அசரமாட்டார்கள்.

இவர்களின் கைவந்த கலை வதந்திகளைப் பரப்புவதும் மொட்டைக் கடிதம் எழுதுவதும்தான்! இந்தப் பெட்டைகளின் பிறவிப்பயன், உடன் இருப்பதும், குழிபறிப்பதும், பெயரைக் கெடுப்பதும், பிறழ்ந்து பேசுவதும் துரோகம் செய்வதும், தூக்கி எரிவதும் இவர்களது தனிக்குணம்.

இவர்களுக்கு ஆசை அதிகம். அதனை அடைய முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அதனை அடைந்தவர்களையும் அனுபவிப்பவர்களையும் கண்டு அடி வயிறு பற்றி எரியும். அதனால் அவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால் இவர்கள் வதந்திகளுக்கு வாய்க்கால் வெட்டி வாய்ப்புக் கிடைக்கிற இடத்திலெல்லாம் கட்டுக்கதை கணக்கற்று கண்ணு முக்கு வைத்து கதை விடுவார்கள்.

நல்லவர்களின் நிம்மதியைக் கெடுப்பதே இந்த நச்சுப் பயல்களின் எச்சச்செயல்களாக இருக்கும். இவர்கள் உடனிருந்து கொல்லும் உயிர் கொல்லியாகும். விசயங்களை அனைத்தையும்; விசமாக்கும் விஷக்கிருமிகள்.!

இவர்கள் இருப்பதால்தான் விஷம் காக்கும் பாம்பைக்கூட நாம் நல்ல பாம்பு என்று அழைக்கிறோம்! ஏனென்றால் இவர்கள் அதனைவிடக் கொடியவர்கள்!

இவர்கள் இந்த விசமத்தனத்தை தமக்கு பிடிக்காத நபர்களைப்பற்றி அவருக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு இல்லாதது பொல்லாதது எழுதி அனுப்புவார்கள். நல்லவர்கள் பெயரோடும் புகழோடும் இருக்கிற இடத்தில் அவரது பெயரைக் கெடுக்கப் பரப்புவார்கள். இதற்காக சிலநேரங்களில் நல்ல குடும்பப் பெண்களையும் களங்கப்படுத்தத் துணிவார்கள் இந்த குணங்கெட்ட குஷ்ட துரோகிகள்.

எனவே இவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய பதிலடி நமது நிம்மதியைக் கெடுக்க வேண்டாம். நாம் நினைத்ததில் இருந்து பின் வாங்க வேண்டாம். அன்றாடச் செயல்களிலும்; அலுத்துக் கொள்ள வேண்டாம். ஒருவேளை அரசல் புரசலாக அவர்களைப் பற்றித் தெரிந்தாலும் அவர்கள் நமக்குத் தெரியாது என்று தன்னை மறைத்துக் கொண்டு இந்த இழிசெயலைச் செய்ததால் அந்தக் காலத்தில் தேவ அடியார்களின் மக்களை நமது முன்னோர்கள் பொறுத்துக் கொண்டதுபோல இந்த…. மக்களை நாம் பொறுத்துக் கொள்ளுவோம்.

மரியாளுக்கு, சீதைக்கு, பாஞ்சாலிக்கு ஏற்படாத அவமானங்களா இன்று நமது குடும்ப, அல்லது பணி செய்யும் இடத்தில் உள்ள பெண்களுக்கு வந்துவிடப் போகிறது? ஆகவே துணிந்து பயணியுங்கள் நம்மை நேரிடையாக மோதத் துணிவில்லாத அந்தச் சாக்கடைகளோடு சண்டையிடாதீர்கள்! அவர்களால் சஞ்சலப்படாதீர்கள். அவர்கள் முதலில் சதியால் வெல்வதுபோல் தெரிந்தாலும் நிச்சயம் இந்த சதியே அவர்களைக் கொல்லும்.

அந்த மன ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளை மன்னித்து விடுங்கள்! அவர்கள் கல்லறைக்குப்போகும் வரை அவர்களது சில்லரைப் புத்தி மாறப் போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களே! உங்களைப் பக்குவப்படுத்த இறைவன் கொடுத்த இனிய விஷமாக இருப்பினும் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அசராமல் வாழுங்கள். நம்மை எதிர்க்கத் துணிவின்றி இல்லாதது பொல்லாதது எழுதித் தள்ளுபவர்களுக்கு இதை விட வேறென்ன பதில் கொடுக்க முடியும்! நம்ம செமய வாழ்ந்தாலே அவர்கள் இதைப் பார்த்துப் பார்த்து செத்தே போய் விடுவார்கள்.

அவர்கள் செய்வினை எல்லாம் செயலிழந்து போகும். கடிதம் என்ற பெயரில் அவர்கள் அனுப்பிய கண்ணிவெடிகள் அவர்களை காணாமல் ஆக்கிவிடும். அவர்கள் வதந்தி என்ற பெயரில் கக்கிய விசங்கள் அவர்கள் வாயை மட்டுமல்ல வாழ்க்கையையும் அசிங்கப்படுத்தும்! நம்மைக் களங்கப்படுத்த நம்மோடு இணைந்து பேசியவர்களை யாருக்கும் பயந்து எடுத்தெறிந்து விடாதீர்கள். அப்படியென்றால் உங்கள் பயம் அவர்களுக்கு வெற்றியைத் தந்து விடும். தர்மம் செயிக்கும்! நல்லது நடக்கும்! தொடர்ந்து பயணியுங்கள். துணிவே துணை!

“எதிரிகள் இப்போது
வாளெடுப்பதில்லை…
கால்பிடித்தும்
நம் வால் பிடித்தும்
கூட இருந்தே
குழிபறிப்பார்கள்
வதந்திகளைப் பரப்பி
வஞ்சம் தீர்ப்பார்கள்”

ARCHIVES