01

Jul

2015

நட்சத்திரங்கள் வெளிவருகின்றன

இருண்டுவிடுகிறபோது நட்சத்திரங்கள் வெளிவருகின்றன

இருண்டுவிடுகிறபோது நட்சத்திரங்கள் வெளிவருகின்றன

மிகவும் இருண்டுவிடுகிறபோது நட்சத்திரங்கள் வெளிவருகின்றன. இது எவ்வளவு ஆழமான அழுத்தமான வார்த்தை. இதனை வாசிக்கும் போது தெரியது. சற்று யோசிக்கும் போது புரியும். இதில்தான் வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவம் அடங்கிக்கிடக்கிறது. இதனை அறிந்தவர்கள் வரலாற்றில் இன்னும் வாழ்;ந்து கொண்டிரக்கிறார்கள். இதனை அறியாதவர்கள் சுடுகாட்டில் கூட தடயங்கள் இல்லாமல் மறைந்திருக்கிறார்கள்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் சிறிய மெல்லியதாக ஒரு கோடு மட்டுமே உள்ளது. சோதனை என்ற கூட்டுக்குள் இருந்துதான் சாதனைப் பறவை தன் சிறகை விரிக்கும். இருளுக்குள் மட்டுமே ஒளி தன்னை இருத்திக்கொள்ளும் துன்பத்தின் விளிம்பில்தான் இன்பம் தனது இருக்கையை  அமைத்திருக்கும். இவ்வாறு ஒரு நாணயத்தின் இருப்பக்கங்களையும் அறிந்தவர்கள் மட்டுமே அதனை செலவழிக்கமுடியும். ஒரு பக்கம் மட்டுமே தெரிந்து கொண்டு உழன்று கொண்டு இருப்பவர்கள் செல்லாக்காசாக  மாறி பயனற்றுப்போவதை இப்பூமியில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

வாழ்க்கையில் துன்பமே வரவேண்டாம் என்று வரம்வேண்டிக்கொண்டு வந்தால் இப்பூமியில் வாழ வேண்டிய அவசியம் இல்லாது போயிருக்கும். வாழ்க்கை என்பது திசை தெரியாத ஊருக்கு நாம் தேடிச்செல்லும் பயணம் அதனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டம் நாம்தான் புதிய முயற்சியோடு போராடப்போகிறோம்.

வாழ்க்கைப் பயணத்தை தொடங்குபவர்களுக்கும், தொடர்பவர்களுக்கும் இடையில் சில இடையூறுகள் ஏற்படத்தான் செய்யும். சிலர் இடையூறு ஏற்படுவதற்கு நாமதான் காரணம் என வெந்து நொந்து விரக்தியில் உழன்று தன் சக்தியெல்லாம் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் சோகம் என்னும் சூறாவளிக்குப் பலி கொடுத்து விடுகிறார்கள். சிலர் தனக்கு ஏற்படும் இடையுறுகளுகு;கு பிறர் மீது குற்றம் சாட்டி அவர்களைப் பழிவாங்க தன் சக்தியெல்லாம் பயன்படுத்தி தன்னைச் சக்கையாக்கி பயனற்றுப்போகி விடுகிறார்கள். சிலருக்கு தனக்கு வந்த துன்பத்திற்கு காரணமே தெரியாமல் சோதிடம், இறைநம்பிக்கை என அலைந்து அலைந்து அலுத்துப்போகிறார்கள். சிலர்மட்டுமே ஒரு நிமிடம் அமர்ந்து யோசித்துப்பார்த்து அதற்குக் காரணங்களைத் தேடாமல் அதிலிருந்து எவ்வாறு வெளிவரலாம் எனச் சிந்தித்து செயல்பட்டு வெளிவந்து வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். அது வரலாறுகிறது. வருகின்ற தலைமுறைக்கு பாடமாகவும் அது மாறுகிறது.

ஒருமுறை ஒருவர் வாழ்க்கையில் தோல்விமேல் தோல்வி கண்டவர். வாழ்க்கையின் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிடுகின்றார். எனவே தற்கொலை செய்வதற்காக ஒரு மலையின் உச்சிக்குச் செல்கிறார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்யப் போகும் போது அருகில் ஒரு புதரிலிருந்து ஒரு சிறு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. அதனைக் கேட்டவுடன் அதனருகில் சென்று அந்தக்குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு சுற்று முற்றும் பார்க்கிறார் யாருமே இல்லமால் அடர்ந்த காட்டுக்குள் அனாதையாக அழுது கொண்டிருக்கும் அந்தக்குழந்தையின் மீது மனமிறங்குகிறார். மீண்டும் தன் வீட்டிற்கு குழந்தையோடு திரும்புகிறார். அக்குழந்தையை  வளர்த்து ஆளாக்கும் எண்ணத்தோடு தனது வாழ்க்கையிலும் ஒரு புதிய அத்தியாத்திற்கு வித்திடுகிறார். அக்குழந்தைக்கு அவர் தாலாட்டு பாடும்போது

தூக்குக் கயிற்றை தொட்டில் கயிறாய் மாற்ற வந்தாயோ - என்
 தூக்கத்திற்கு தடைவிதித்து பார்க்க வந்தாயோ - எனக்கு
 பாலூத்தி அழுவார்களென பார்த்திருந்தேனே - உனக்கு
 பால் கொடுத்து அழுகையை நிறுத்த பாசம் வைத்தாயே”
 என்று பாடினாராம்

இக்கதையில் இரு கருத்துக்கள் உங்களுக்கு விளங்கும்
ஒன்று ஒரு கதவை அடைத்த இறைவன் மற்றொரு பக்கம் திறந்தே வைத்திருப்பான் எனவே மூடிய கதவை முறைத்துப்பார்த்துக் கொண்டிருப்பதை விட திறந்தே இருக்கும் கதவைத் தேடிசெல்வோமே!
இன்னொரு கருத்து ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. அதனை விட்டு தனக்கு ஏற்படும் தோல்விகளுக்கு தன்னை முடித்துக்கொள்வதுததான் சரியென தவறான முடிவு எடுக்கக்கூடாது என்பதுதான்.

உலகில் தனக்கென ஓடுபவர்கள் மட்டும்தான் தோல்வியைத் தோல்வியாகக் கருதுகிறார்கள். பிறருக்காக வாழ விரும்புவர்கள் இதுவும் கடந்து போகும் என நினைத்து அனைத்தையும் கடந்து செல்லுகிறார்கள்.

அவற்றில் ஏற்படும் அவலங்கள் கூட பிறருக்காகத்தானே காயப்படுகிறோம் எனப் பெருந்தன்மையாக எண்ணுகிறார்கள். எனவே நமக்கு ஏற்படுகின்ற இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள், இலாப நட்டங்கள் நம்மை இறைவன் மாமனிதர்களாக்க பக்குவப்படுத்தும் பட்டறைகளாகப் பயன்படுத்துகிறார்.

தனக்கு வருகின்ற சரிவுகளைப் புரிந்து கொள்ளாமல் ஏற்றுக்கொள்ளாமல் புலம்பித்திரிபர்கள் ஒருவித மனநோயாளிகள் தனக்கு வருகின்ற தோல்விகளுக்குப் பிறரைக் குறைசொல்பவர்கள் தன்னம்பிக்கையற்றவர்கள் பலகினமானவர்கள். தன்னை ஏற்றுக்கொள்ளத்தயங்கி தன்னை மறப்பதற்காகப்  போதை பொருளுக்கு அடிமையாவர்கள் மன உறுதியில்லாவர்கள் மரண இறுதி ஒப்பந்தமாகும். தன் தோல்விகளை பிறர் தோளிலிருந்து கொண்டு சுமக்கு ஆறுதலைத் தேடி அலைபவர்கள் மானிட போலிகள் நேர்நின்று நெஞ்சை நிமிர்த்தி யாரையும் குறைகூறாமல் எதற்கும் அஞ்சாமல் துணிந்து நின்று சவாலை சந்திப்பவர்களே சாதனையாவர்கள். நீங்கள் சாதனையாளர்கள்.

இரவின் கரைகள் நிலவை ஒன்றும் செய்வதில்லை வைரமுத்து சொல்வது போல உங்கள் அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள் அதுதான் உன்னை உன்னத நிலைக்கு இழுத்துச்செல்லும் படிகட்டுகளாகும். ஏனெனில் இருள் அதிகமாகின்ற போதுதான் நட்சத்திரங்கள் வெளிவருகின்றன…..

ARCHIVES