03

Nov

2021

நாட்டுப்பற்று…

மண்ணின்மீது தோன்றிய உயிரனங்களில் மகத்தானது மனித இனம். மண்ணின் மீது உரிமை பாராட்டுபவனும் மனிதன் மட்டுமே. மற்ற உயிர்கள் அனைத்தும் பிறந்து வளர்ந்து பிறருக்குப் பயன்பட்டு மடிந்து போகும். அதனால் அது பிறந்த பயனை அடைந்து விடும். மனிதனின் மகத்துவமும் அதுவே. வாழ்நாள் முழுவதும் பிற உயிர்களுக்கு முடிந்தவரை பயனுள்ளவனாக வாழ்ந்து பிறரை வாழ வைத்து மடிந்து போவதே அவனுக்கு மகத்துவமாகும்.

மனிதன் தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித்தர வேண்டியது மிக மிக முக்கியமானதாகும். அதனால் தான் பிரபலமான பெரியோர்கள் தாங்கள் பெயரோடு ஊர்ப் பெயரையும் சேர்த்தே உச்சரிப்பார்கள். அந்த ஊர்ப்பற்று உயர்ந்து நாட்டுப்பற்றாக நடைபோட வேண்டும். பிரான்ஸ், ஜப்பான் போன்றவர்கள் தாங்கள் மொழிகளைத் தவிர பிறமொழிகளைக் கூட தேவையில்லாமல் கற்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தன் தாய்மொழி மீதும், தாய்நாட்டின் மீதும் தீராத காதலும் பற்றும் கொண்டு வாழ்கிறார்கள்.

குறிப்பாக ஜப்பானை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்களது நாட்டுப்பற்று அதிசயிக்கத்தக்கது. இரு மாணவர்கள் இணைந்து கண்டுபிடித்த அலைபேசிதான் Nokia இது ஜப்பான் நாட்டில் உள்ள மிகச்சிறிய ஊர். இது அந்த மாணவர்களின் அரிய பெரிய கண்டுபிடிப்புகளால் ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ தெரியுதோ இல்லையோ Nokia என்ற தனது ஊரை அனைவருக்கும் தெரியும் அளவிற்குச் செய்து விட்டார்கள்.

இன்னொன்றும் அவர்களது தீராத நாட்டுப்பற்றைத் தெளிவுபடுத்தும். அவர்கள் நாட்டில் அமெரிக்கா நாடானது ஒரு குண்டூசியைக் கூட விற்க முடியாது. காரணம் ஜப்பான்காரர்கள் ஒருவர் கூட அமெரிக்கப் பொருட்களை வாங்கக்கூடாது என எழுதப்படாத சட்டமாக இன்றுவரை கடைபிடித்து வருகிறார்கள். காரணம் என்ன? இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க நாடு ஜப்பான் நகரான ஹீரோசீமா, நாகசாகி என்ற இரண்டு நகரத்தின் மீது குண்டுவீசித் தாக்கியதால் அதனை மனதில் வைத்துக் கொண்டு இன்றுவரை அந்த நாட்டில் இருந்து உற்பத்தியாகும் எந்தப் பொருளையும் வாங்கமாட்டார்கள். இதுவரை அந்த நாடும் பொருளாதாரத் தடைவிதிக்கவில்லை ஆனால் மக்களுடைய நாட்டுப்பற்று அமெரிக்கப் பொருட்களை வாங்கக் கூடாது. நாம் வாங்கும் போது கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் அமெரிக்காவிற்கு ஆயுதம் தயாரிக்க உதவும். அது மீண்டும் நமது கழுத்தையே நெறிக்கும் என்ற விழிப்புணர்வோடும், வைராக்கியத்தோடும் வாழ்கிறார்கள்.

அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் நாட்டு மக்களுக்கு ஏது நாட்டுப்பற்று? நாம் நாடு என்பதே கிடையாது. இவை மாநிலமாகவும் மொழியாகவும் பிரிக்கப்பட்டு நமக்குள்ளே அடித்துக்கொண்டு சாகிறோம். ஒரு மாநிலத்தில் தோன்றும் நதி அடுத்த மாநிலத்திற்குள் நுழைந்து விடாதபடி அபகரிக்க முயல்கிறோம். வீணாகக் கடலுக்குள் சென்றாலும் பரவாயில்லை தானாக யாருக்கும் வழங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறோம். நம் நாட்டை அதிகமாக அச்சுறுத்திக் கொண்டிருப்பது சீனா. ஆனால் நாம் பயன்படுத்துகின்ற பொருட்களில் பாதிக்குமேல் சீனாப் பொருட்களாகத்தான் இருக்கும்.

கடந்த ஆண்டில் புல்வாமாத் தாக்குதலில் நம் படைவீரர்கள் சிதைந்து சின்னாபின்னாமக்கப்பட்டார்கள். அப்படி இருந்தும் நம் சீனப் பொருட்களைத்தானே வாங்குகிறோம். மலிவு விலையில் அவன் நம் மடி மீது கொட்டுவதனால் தரமான ஜப்பான் தயாரிப்புப் பொருட்களைக் கூட நாம் தள்ளி வைக்கிறோம்.

நாம் சீனப்பொருட்களை வாங்கும் போது அவன் பெறுகின்ற ஒவ்வொரு இந்தியப் பணமும் நம் வீரர்களைக் கொன்று குவிக்கும் ஆயுதமாகத்தான் பார்க்க வேண்டும். ஆகவே நம் நாட்டுப்பற்று உள்ளவர்கள் அத்தனை பேரும் நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிற, வம்பிழுத்துக்கொண்டு இருக்கிற எந்த நாட்டின் பொருட்களையும் வாங்கமாட்டோம் என சபதம் எடுப்போம்.

நம் குழந்தைகளுக்கும் அதனைக் கற்றுக் கொடுப்போம். உலகிலே ஒப்பற்ற சத்து நிறைந்த மிட்டாய் எது என்றால் கடலை மிட்டாய்தான். அதனை இந்தக் கார்பரேட்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது குழந்தைகளுக்கு இதனைப் பயிற்றுவிப்போம். பிறந்த நாளுக்குச் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதைவிட கடலைமிட்டாய் வாங்கிக் கொடுங்கள். பிறருக்கும் கொடுக்கச் சொல்லுங்கள் நச்சுப் பொருளால் உருவாகும் பானங்களை ஒழிந்து நமது நாட்டுப் பொருட்களை உண்ண, குடிக்கப் பழகுங்கள். நம் நாட்டு விவசாயம் பெருக, விவசாயிகள் பெருமைப்பட உள்ளுரில் விளையும் பொருட்களில் உயிர்வாழ வரும் தலைமுறையை உருவாக்குங்கள் வாழ்ந்து காட்டுங்கள்.

“இந்தியனாய் இரு
இந்தியப் பொருட்களை வாங்கு”

ARCHIVES