09

Feb

2022

சபாஷ் சகோதிரி…

தர்மம் தனை சூது கவ்வும் என்பார்கள். ஆனால் இங்கு சூழ்ச்சி கவ்வியுள்ளது. வாழும் தலைமுறைகளுக்கும் வாடும் பரம்பறைக்கும் இவர்தான் வாழும் அன்னைத் தெரசாள் என்று கூறுமளவிற்கு உள்ள சகோதரியைப் பொய் வழக்குப்போட்டு விலங்கு மாட்டியிறுக்கிறது இச்சமுதாயம்.

சகோதரி கைது! செய்த குற்றம் என்ன? விசாரித்த உண்மை. தஞ்சாவூர் மாவட்டம் மிக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள பள்ளியில் பயின்ற லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டாள். அதற்கு கட்டாய மதமாற்றம் என்ற குற்றச் சாட்டைக் கூறி சகோதரி சகாயமேரி(62) கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் நடந்தது என்ன?

லாவண்யாவிற்கு தந்தை உண்டு தாய் இல்லை. தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். சித்தியின் கொடுமையால் படாதபாடுபடுகிறார். இதனால் ஒரு சிலரின் உதவியோடு சித்தியின் கொடுமையை இருமுறை சைல்டுலைன் (Child Line)கு புகார் தெரிவிக்கிறார். அவளுக்குத் தோல் வியாதியும் உண்டு. இது அவளுடன் பிறந்த இரு தம்பிகளுக்கும் சித்தி மூலம் பிறந்த ஒரு தம்பிக்கும் பரவும் எனக் கருதிய சித்தி. லாவண்யாவிற்கு உறங்குவதற்குத் தனி பாய் உண்பதற்குத் தனித்தட்டு என அவளைத் தனிமைப்படுத்தி அவளுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்றிவிடுகிறாள். இதனால் மனம் வெறுத்த லாவண்யா உயர்கல்வி வேண்டி பெற்றோரை வெறுத்து மிக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

இங்குதான் அவள் சகோதரி சகாயமேரியைச் சந்திக்கிறாள். அவள் கதையைக் கேட்டு பெற்றோர்களே என்னை ஒதுக்குகிறார்கள் என்றதும். அவளைத் தன் வளர்ப்பு மகளாகவே நினைத்து அவளோடு உறவாடுகிறார், விளையாடுகிறார். அவளுக்கு விடுதியில் ஒரு கடைவைத்து அதனை அவள் பொறுப்பில் விட்டுவிடுகிறார். அவளுக்குச் சடங்குகள் நிகழ்வு கூட விடுதியில் வைத்தே நடைபெற்றது. வெளியூருக்குச் செல்லும்போது இவளையும் அழைத்தே செல்வார்கள்.

இதுதான் நடந்தது. ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன? இந்த லீவிற்கு வீட்டிற்கு போய் வா என்று சகோதரி சொன்னதும் வீட்டின் கொடுமையை எண்ணிப்பார்க்க. அவள் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். இறுதியில் அவள் இறந்துவிடுகிறாள். இதனால் அவள் மனம் மாற்றம் செய்யத் தூண்டப்பட்டாள். அதனால் தற்கொலை செய்து கொண்டாள் எனப் பொய் வழக்குப் போடப்பட்டு சகோதரி கைது செய்யப்படுகிறாள்.

சகோதரியைக் கைது செய்யும்போது உங்களுக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறுங்கள். உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சொன்னதற்கு நான் பொய்பேச விரும்பவில்லை எனக் கூறுகிறார். அவ்வாறு அவர்களைக் கூற வைத்தது கிறிஸ்தவம். காரணம் அவர்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை. மாறுவேடம் போடவில்லை. மற்றவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. இப்படி வளர்ந்திருக்கிறாரே இவர் யார்? இவர்தான் கிறிஸ்துவின் சீடர்.

பெற்றோரால் கைவிடப்பட்டு பிற குழந்தைகளுடன் பேசவிடாமல் தடுத்து நோயினால் புறக்கணிக்கப்பட்டு நொந்து செத்துக் கொண்டிருந்தவளை தன்பிள்ளையாகத் தத்தெடுத்து பூச்சூடி பொட்டு வைத்து சொக்கத் தங்கமாய் இங்கு உலவவிட்ட வாழும் அன்னைத் தெரசாவே இனி வரலாறு உனைப் பேசுமே ஏனென்றால் நீ கிறிஸ்துவின் சீடத்தி.

காவல்துறை கைதுசெய்யும் போது தப்பிக்க வழி சொல்ல, பொய் சொல்லத் தெரியாது என்று போய் வேனில் ஏறிய வீரமங்கை என்பிள்ளையே இறந்தபிறகு எனக்கு இங்கு என்ன வேலை என்று பெற்றவளே கைவிட்ட குழந்தையைத் தன்னை மற்றவராக எண்ணாமல் கண்ணீர் விட்ட காரிய தரிசியே! காலத்தின் கோலம் உங்களை எங்கே நிறுத்தியிறுக்கிறது? கவலைப்படமாட்டீர்கள் நீங்கள் கர்த்தாவின் மகள்…

இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி இதில்தான் எங்கள் மதத்தை வளர்க்கப் போகிறேன் என்றால் அதனை யார் மதிப்பார்கள்? இங்கு இந்து மதம் இருக்கிறது அதிலிருந்து கிறிஸ்தவம், முஸ்லீமாக மாறினார்கள். மதந்தான் மாறினார்கள் தவிர மனம் மாறவில்லை. இன்றும் பிறமதத்துக்காரர்களையும் மாமன், மச்சான் என்று பாசத்தோடு பழகும்போது உங்களுக்கு எதுக்கு இந்தப் பசப்பு வேலையும் பச்சோந்தி நடிப்பும்?

மதம் என்ற பெயரில் ஒரு மாணவியை கொன்றீர்கள் காத்தவள் கையில் காப்பு இட்டீர்கள். முடிந்தால் கலவரத்தைத் தூண்டுகிறீர்கள் ஒன்றுபோல் பொய் பேசுகீறிர்கள் இதுவெல்லாம் கடவுளின் வரமா? இல்லை கண்டவர்கள் சாபமா?

தமிழ்நாட்டில் மதத்தைப் பரப்புவர்களைவிட மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்தான் அதிகம். அவரவர் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள நல்லவர்களாய் வளர்த்து எடுக்க தனக்குப் பிடித்த கடவுளை தனக்குப் பிடித்த வழியில் கொண்டாடுவதுதான் தமிழ்நாடு. இங்கு வந்து அடுத்தவர்களை அழிப்பதும் அடுத்தவர்கள் பெயரைக் கெடுப்பதும் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்களை இழுத்து மூட என்னென்ன செய்யலாம் என நினைப்பதும் தான் மதம் அதனை நிறைவேற்றுவதுதான் கொள்கை எனச்சொன்னால் எந்த இளிச்சவாயன் இதனைக் கேட்பான்?.

கூட இருப்பவர்களைக் கொலை செய்யக் கொளுத்திப்போடுவதையே வதந்தியாகப் பரப்பும் கொள்கையற்றவர்கள் அந்தக் கூமுட்டைகளை தொலைக்காட்சியில் கழுவிக் கழுவி ஊற்றினாலும் வெட்கமில்லாமல் வீதியில் திரிகிறார்களே நமக்கு வெட்கமாக இருக்கிறது.

பட்டை போடுவதும், கலர்சட்டையில் திரிவதும் பக்தன் என்று பறைசாற்றாது. மனச்சாட்சிக்குப் பயந்தவனே மதத்தைப் பின்பற்ற முடியும். சத்தியம் சோதிக்கப்பட்டாலும் சாவதற்கே நம்மைக் கையளித்தாலும் கடுகளவும் தடம் மாறாதவர்கள் அல்லவா கடவுள் பக்தர்கள். இதனைச் சரித்திரத்தில் சகாயமேரி என்று சொல்வார்களே தவிர. சண்டையை மூட்டிவிடும் சாத்தானின் சீடர்கள் அல்ல. இன்றளவும் நான் இந்த மதம், அந்த மதம் என்று இனம் பிரித்துத் திரியாதே மனம் முறிச்சு அலையாதே. எல்லோரும் ஒன்றாயிருப்பதுதான் இறைவனின் விருப்பம் மதவேற்றுமைகள் தொலையட்டும் இனவேற்றுமை அழியட்டும். எல்லோரும் இறைவனின் பிள்ளைகளே இதனை வேறுபடுத்திப் பார்த்தால் தொல்லைகளே!

“துறவியின் கோபம்
தலைமுறைகள் சாகும்”

ARCHIVES