12

May

2023

சித்தரவதை…

ஒரு கொடுமைக்காரக் கணவன் அல்லது குடிகாரக் கணவன் தன் மனைவியைக் கடுமையாக நடத்துவது ஒரு காவல்துறை அதிகாரி ஒரு குற்றவாளியைச் சந்தேகப்பட்டு அவனிடம் கடுமையாக நடந்து கொள்வது அல்லது மாற்றாந்தாய் குழந்தைகளிடம் இரக்கம் இன்றி கடுமையாக நடத்துவதை உலகம் அவனைச் சித்தரவதைப்படுத்துகிறது எனச் சித்தரிப்பார்கள். ஏனென்றால் கடுமையாக நடத்தப்படுவதால் அவர்கள் மீது மற்றவர்களுக்கு எப்போதும் அனுதாபம் ஏற்படும். இதனால் பலர் ஆறுதல் சொல்வார்கள் அருகிலிருப்பார்கள். அணைத்துக் கொள்வார்கள.; அந்தளவுக்கு அவர்கள் படும் வலிக்கு வலிமை உண்டு. ஆனால் இது தொடக்கத்தில் சித்தர்வதை என்பதே சித்திரவதையாகிவிட்டது.

தொடக்கத்தில் உயிர்கள் எல்லாம் ஒன்றெனவே கருதப்பட்டது உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. அதன்பின் அறிவின் அடிப்படையிலும் அவர்களின் வேகம், விவேகம், ஆற்றல், ஆளுமை இவற்றின் அடிப்படையில் அவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. வேட்டைத் திறத்தால் சிங்கம் காட்டிற்கு இராஜாவானது. குரலால் குயிலுக்கு அழகு, இறகால் மயிலுக்கு அழகு, அலகால் கிளிக்கு அழகு, அழகால் வண்ணத்துப்பூச்சி அழகு, தந்தந்தால் யானை அழகு, கொம்பால் மான் அழகு, வீழ்வதால் அருவிக்கு அழகு, சத்தத்தால் குருவிக்கு அழகு, எழுவதால் கதிரவன் அழகு, வீசுவதால் காற்றுக்கழகு, அலையால் கடலழகு, மலையால் கோவில் அழகு, இப்படி இடம், பொருள், உடல், இயக்கம் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தன் இருப்பையும், முக்கியத்துவத்தையும் முதன்மைப்படுத்தினார்கள் முன்னிலைப்படுத்தினார்கள் எல்லா உயிர்களும் இரைதேடுவதும், இனப்பெருக்கம் செய்வதும் மட்டுமே இப்பிறவியின் வேலை என இருந்துவிட்டார்கள். அதில் மனிதன் மட்டுமே இந்த இரண்டுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ இருக்கிறது என யோசிக்க ஆரம்பித்தான் அதனைச் சுவாசிக்க ஆரம்பித்தான் இயற்கையாகவே இருந்தான் இவர்கள்தான் சித்தர்கள் என்று சிலாகித்துக் கொண்டார்கள்.

உலகிற்குள் ஓடிக்கொண்டிருக்கிற உயர்ந்த சக்தி நம் உடலுக்குள் நம்மை ஊடுருவி நிற்கிறது மற்ற உயிர்களிடத்தில் காண்கின்ற அத்தனை சக்திகளும் மணிமகுடம் சூட்டி மனதிற்குள் நிற்கிறது. என்பதனைக் கண்டார்கள். இயற்கையை உண்டார்கள் இயற்கையால் உண்டானார்கள். இயற்கையில் கருவானார்கள் இயற்கையால் உருவானார்கள் இறுதியில் இயற்கையாகவே உருமாறினார்கள் இதனைப் பிறப்பு இறப்பு என்று பெயரிட்டு அழைத்துப் பூமிக்கு வந்த தனது புனிதப் பயணத்தின் வரலாற்றை முடித்துக் கொண்டார்கள்.

இயற்கையை நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பதனைப் பிரித்து அது நம்மைக் காப்பதால் அதுவே தமது கடவுளாகக் கொண்டார்கள். இதுவே நம் உடம்புக்குள்ளும் இருக்கிறது என்பதனை உணர்ந்தார்கள். ஆகா… அப்படியென்றால் இறைவன் குடியிருப்பது எனக்குள்தானே…. எனது உள்ளம்தான் இறைவன் வாழும் இல்லம் இதுவே ஆலயம் என்பதனை உணர்ந்தார்கள், உரைத்தார்கள், இதனை உணராதவர்கள் காடு நோக்கி ஓட ஆரம்பித்தார்கள் ஓடினார்கள் ஆளரமற்ற இடத்தில் அமர்ந்தார்கள் கடவுளைக் கண்டார்கள், காலத்தை வென்றார்கள்.

இச்சமயத்தில் தான் மதவியாபாரிகள் மேற்கத்திய தேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவினார்கள் மதவியாபாரம் என்பது மனிதனை அடிமையாக்குவது எனவே எதிர்படுகிறவர்களை அடிமைப்படுத்த மதம் என்னும் மதுவினை அருந்தக் கொடுத்தார்கள் தன்னையே சிந்திக்கச் சொன்ன சித்தர்ளைத் தடி கொண்டு அடிக்கச் சொன்னார்கள். அமைதி தேடச் சொன்னவர்களை காணாமல் செய்தார்கள் நீதான் கடவுள் என்று சொன்னவனை நிர்வாணம் ஆக்கிச் சித்தரவதை பண்ணீனார்கள். இதனால் கடவுளைப் பற்றிச் சொன்ன மகான்களைச் சமாதியாக்கினார்கள். சித்தர்களை கழுவேற்றினார்கள், கழுத்தை அறுந்தார்கள் காணாமல் செய்தார்கள் இதனால் மனிதம் செத்தது மதம் வாழ்ந்தது.

இன்றுவரை இந்த முட்டாள் மக்களை ஏமாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது என்றால் அது மதத்தைக் கையிலெடுப்பது. முட்டாள்களை வைத்து நாம் ஒரு அரியணை ஏறவேண்டுமென்று நினைத்தால் அவர்களுக்கு மதத்தைக் கொடுத்துவிட வேண்டும் ஒருவனை முட்டாளாக்க வேண்டுமென்றால் நீ அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை அவனிடம் மதத்தைப் பற்றி பேசிக்கொண்டே இரு கேட்டுவிட்டால் அவன் அடிமை கிளர்ந்துவிட்டால் ஓடிவிடு அவன் உண்மைவாதி அவனிடம் உன் பருப்பு வேகாது.

சில அடையாளப் பொருட்களைக் கொடுத்து வழிப்பாட்டுச் சடங்குகளைச் செய்துவிட்டால் இனிப்பைக் கொடுத்து குழந்தை செயினைப் பறிப்பதைவிட மக்களை நாம் ஏமாற்றுவது மிக எளிது. மதம் என்று சொன்னால் மனிதன் சிந்திக்க மாட்டான். கேள்வி கேட்க மாட்டான் ஏனென்றால் அவன் பார்வையில் கடவுள் அன்பானவர்கள் அல்ல அடக்கி ஆள்பவர்கள். எனவே என்றோ ஒரு நாள் இறைவனை எனக்குள் தேடச் சொன்னவரை சித்ரவதை செய்து கொல்ல வைத்துவிட்டோம். இன்றுவரை உண்மை இறைவனை உலகம் கண்டுகொள்ளவே இல்லை பிரிந்து கிடக்கிற மக்களை பார்த்து இவர்கள் நம் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று பிதற்றிக் கொள்கிறோம் ஓரே கடவுள் அதற்கு அடையாளம் இல்லை. யாரையும் ஓதுக்குவதும் இல்லை எதையும் விட்டு விலகுவதும் இல்லை எங்கெங்கோ தேடி அலையவும் இல்லை நான்தான் கடவுள் இல்லை. இல்லை நானும் இல்லை நானும் நீயும் கடவுள் …. முதத்தைக் சொல்வோம் தெய்வத்திடம் செல்வோம்.

“போதிமரம் என்ன புளிமரம் கூட
ஞானத்தைத் கொடுக்கும் – ஆனால்
இருப்பவன் புத்தனாக இருக்க வேண்டும்”

ARCHIVES